ஆஸ்திரேலியாவை சேர்ந்த அரிய வகை ஆந்தை மீட்பு


ஆஸ்திரேலியாவை சேர்ந்த அரிய வகை ஆந்தை மீட்பு
x

ஆஸ்திரேலியாவை சேர்ந்த அரிய வகை ஆந்தை மீட்கப்பட்டது.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். விவசாயியான இவர், நேற்று காலை தனது விவசாய தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்றுள்ளார். அப்போது, அவரது தோட்டத்தில் வித்தியாசமான தோற்றத்தை கொண்ட ஆந்தை ஒன்று பறக்க முடியாமல் தரையில் கிடந்தது. உடனடியாக ஆந்தையை மீட்ட செல்வராஜ், ஆந்தையின் படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து அப்பகுதி மக்களுக்கு தகவல் பரவியதால் சிறுவர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் அந்த ஆந்தையை ஆர்வமுடன் பார்த்து சென்றனர். இந்த ஆந்தை ஆஸ்திரேலியா நாட்டில் அதிக அளவில் வசிக்கக்கூடிய ஆந்தை இனமான `பார்ன்' வகையை சேர்ந்தது. இந்த ஆந்தையின் வாய் அலகு மற்றும் கால்களை கட்டி வீட்டில் வைத்தால் அதிர்ஷ்டம் கிடைக்கும் என்ற மூட நம்பிக்கை இந்தியாவில் இருக்கிறது. இதனால் இந்தியாவில் பரவலாக காணப்பட்ட இந்த வகை ஆந்தைகள் வேட்டையாடப்பட்டு ரூ.8 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை விற்பனை ஆவதாகக் கூறப்படுகிறது. கடந்த ஆண்டு ஆந்திராவில் ஒரு கடத்தல் கும்பலிடம் இருந்து போலீசார் 10 பார்ன் ஆந்தைகளை மீட்டுள்ளனர். இதனையறிந்த வனத்துறை அதிகாரிகள் நேரில் வந்து அந்த அரிய வகை ஆந்தையை மீட்டு சென்றனர்.


Next Story