உடல் அழுகிய நிலையில் மூதாட்டி பிணமாக மீட்பு
உடல் அழுகிய நிலையில் மூதாட்டி பிணமாக மீட்பு
கோவை
கோவை அருகே சீரநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் இந்திராணி (வயது 73). இவர் வீட்டில் தனியாக வசித்து வந்தார். இவரது மருமகள் ஆனந்தி (38), கவுண்டர் மில் பகுதியில் வசித்து வருகிறார். இவர், அவ்வப்போது தனது மாமியாரை அவரது வீட்டில் சென்று பார்த்து விட்டு நலம் விசாரித்து வருவது வழக்கம். அதன்படி கடந்த 20-ந் தேதி ஆனந்தி தனது மாமியாரை பார்க்க சீரநாயக்கன்பாளையம் சென்றார். அப்போது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகம் அடைந்த அவர், கதவை தட்டினார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் கதவு திறக்கப்படவில்லை. இதையடுத்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அங்கு இந்திராணி படுக்கையில் உடல் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். அவரது அருகில் விஷப்பாட்டில் கிடந்தது. இது குறித்து ஆர்.எஸ்.புரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.