திடீர் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய மின்ஊழியர் மீட்பு


திடீர் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய மின்ஊழியர் மீட்பு
x
தினத்தந்தி 23 Sept 2023 1:45 AM IST (Updated: 23 Sept 2023 1:50 AM IST)
t-max-icont-min-icon

திடீர் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய மின்ஊழியர் மீட்கப்பட்டார்.

மதுரை

திருமங்கலம்

திருமங்கலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு பலத்த மழை பெய்தது. குறிப்பாக டி.புதுப்பட்டி, சவுடார்பட்டி, கிழவனேரி, வலையபட்டி உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையால் காட்டாற்று வெள்ளம் ஓடியது. டி.புதுப்பட்டி கிராமத்தில் இருந்து கோபாலபுரம் செல்லும் சாலையில் உள்ள தரைப்பாலம் மழைநீரில் மூழ்கியது. அப்போது கள்ளிக்குடி அருகேயுள்ள வில்லூரினை சேர்ந்த மின்வாரிய ஊழியர் சக்திவேல் இருசக்கர வாகனத்தில் கோபாலபுரம் நோக்கி சென்றார். நடுபாலத்தில் சென்ற போது திடீரென நீரில் சிக்கி பாலத்தின் கீழே இருசக்கர வாகனத்துடன் விழுந்து அலறினார். தண்ணீரில் மூழ்காமல் இருக்க அருகேயிருந்த கருவேலமரத்தினை பிடித்து மிதந்தார். இதனை கண்ட கிராம மக்கள் திருமங்கலம் தீயணைப்புநிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு படையினர் வருவதற்குள் தண்ணீரின் வேகம் அதிகரிக்கவே கிராம மக்கள் கயிறு மூலமாக மின்வாரிய ஊழியர் சக்திவேலுவை மீட்டனர். இருப்பினும் அவரது மோட்டார் சைக்கிள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது.


Next Story