கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்த ஜல்லிக்கட்டு காளை மீட்பு


கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்த ஜல்லிக்கட்டு காளை மீட்பு
x

பொன்னமராவதி அருகே கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்த ஜல்லிக்கட்டு காளை மீட்கப்பட்டது.

புதுக்கோட்டை

பொன்னமராவதி ஒன்றியம் அம்மன்குறிச்சியில் கழிவுநீர் தொட்டி அருகே மேய்ந்து கொண்டிருந்த ஜல்லிக்கட்டு காளை ஒன்று தவறி விழுந்தது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, பொன்னமராவதி தீயணைப்பு நிலைய அலுவலர் சந்தானம் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்த ஜல்லிக்கட்டு மாட்டை பொக்லைன் எந்திரம் உதவியுடன் கயிறு கட்டி மீட்டு அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.


Next Story