காணாமல்போன வாலிபர் மீட்பு


காணாமல்போன வாலிபர் மீட்பு
x

காணாமல்போன வாலிபர் மீட்கப்பட்டார்.

அரியலூர்

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் கரடிகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் நாராயணன் மகன் ஞானசுந்தர்(வயது 24). இவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. இந்த நிலையில் இவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். இவரை அவரது பெற்றோர்கள் மற்றும் போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் ஞானசுந்தர் ஈரோடு அருகே சுற்றித்திரிகிறார் என வாட்ஸ்-அப் வீடியோ வாயிலாக ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சுமதிக்கு தகவல் வந்தது. ஞானசுந்தரின் இருப்பிடத்தை அறிந்து, அவர்களின் பெற்றோர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து அவர் ஜெயங்கொண்டத்திற்கு அழைத்து வரப்பட்டார். மேலும் சிகிச்சைக்காக இன்ஸ்பெக்டர் உதவியுடன் விளாங்குடியில் உள்ள வேலா கருணை இல்லத்தில் சேர்க்கப்பட்டார்.


Next Story