கிணற்றில் தவறி விழுந்த புள்ளிமான் மீட்பு


கிணற்றில் தவறி விழுந்த புள்ளிமான் மீட்பு
x

நாட்டறம்பள்ளி அருகே கிணற்றில் தவறி விழுந்த புள்ளிமானை தீயணைப்பு படையினர் உயிருடன் மீட்டனர்.

திருப்பத்தூர்

ஜோலார்பேட்டை

நாட்டறம்பள்ளி அருகே கிணற்றில் தவறி விழுந்த புள்ளிமானை தீயணைப்பு படையினர் உயிருடன் மீட்டனர்.

நாட்டறம்பள்ளியை அடுத்த லட்சுமிபுரம் பகுதியில் உள்ள காப்புக் காட்டிலிருந்து நேற்று ஒரு வயது ஆண் புள்ளி மான் ஒன்று தண்ணீர் தேடி விவசாய நிலங்களில் சுற்றி திரிந்து வந்தது. அப்போது அந்த புள்ளிமான் வெலக்கல்நத்தம் கொல்லிமேடு பகுதியை சேர்ந்த சந்திரன் என்பவருடைய விவசாய கிணற்றில் திடீரென தவறி விழுந்தது.

தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய அலுவலர் ரமேஷ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று கிணற்றில் கயிறு கட்டி இறங்கி சுமார் 2 மணி நேரம் போராடி புள்ளி மானை உயிருடன் மீட்டனர்.

அதன்பிறகு மீட்கப்பட்ட புள்ளி மானை வாணியம்பாடியில் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். பின்னர் அந்த காப்பு காட்டில் விடப்பட்டது.


Next Story