ஊருக்குள் புகுந்த மான் மீட்பு
ஊருக்குள் புகுந்த மான் மீட்கப்பட்டது.
திருநெல்வேலி
களக்காடு:
நெல்லை அருகே உள்ள ரெட்டியார்பட்டி ஊருக்குள் நேற்று 2½ வயதுடைய சாம்பார் மான் ஒன்று சுற்றி திரிந்தது. இதைப்பார்த்த பொதுமக்கள் நெல்லை வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். வனத்துறையினர் விரைந்து சென்று சாம்பார் மானை உயிருடன் மீட்டு, பாதுகாப்புடன் வனத்துறை வாகனத்தில் ஏற்றி களக்காடு தலையணை வனப்பகுதிக்கு கொண்டு வந்தனர். அங்கு களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குனர் ரமேஷ்வரன் முன்னிலையில் மானுக்கு வனத்துறை கால்நடை மருத்துவர் மனோகரன் சிகிச்சை அளித்தார். அதனைதொடர்ந்து சாம்பார் மான் தலையணை வனப்பகுதியில் விடப்பட்டது.
Related Tags :
Next Story