ஆற்றில் மூழ்கிய தொழிலாளி பிணமாக மீட்பு


ஆற்றில் மூழ்கிய தொழிலாளி பிணமாக மீட்பு
x

பொள்ளாச்சி அருகே ஆற்றில் மூழ்கிய தொழிலாளி பிணமாக மீட்கப்பட்டார்.

கோயம்புத்தூர்

ஆனைமலை

பொள்ளாச்சி அருகே உள்ள சூளேஸ்வரம்பட்டியை சேர்ந்தவர் ஷாஜகான் (வயது 35), கூலி தொழிலாளி. இவர் சம்பவத்தன்று தனது உறவினர் சாதிக் என்பவருடன் அம்பராம்பாளையம் ஆற்றிற்கு குளிக்க சென்றார். ஷாஜகான் ஆற்றில் இறங்கி குளித்துக்கொண்டிருந்தபோது, திடீரென அவர் சுழலில் சிக்கி தண்ணீரில் மூழ்கினார்.

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த சாதிக் ஆனைமலை போலீசார் மற்றும் தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தார். தகவல் அறிந்து வந்த தீயணைப்பு படையினர் ஆற்றில் இறங்கி தேடினர். ஆனால் கண்டுபிடிக்கமுடியவில்லை. தொடர்ந்து நேற்று காலை தேடுதல் பணி தொடங்கியது.

நீண்ட போராட்டத்திற்கு பிறகு ஷாஜகான் பிணமாக மீட்கப்பட்டார். அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து ஆனைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story