கரூர் அரசு கலைக்கல்லூரியில் ஆராய்ச்சி வழிகாட்டி பயிலரங்கம்
கரூர் அரசு கலைக்கல்லூரியில் ஆராய்ச்சி வழிகாட்டி பயிலரங்கம் நடைபெற்றது.
கரூர் அரசு கலைக்கல்லூரியில் ஆராய்ச்சி கருத்துக்களை குறிகாட்டி வழி ஆராய்தல், கருத்து திருட்டை கண்டறிதல் மற்றும் இதழ் தேர்வு உத்திகள் என்னும் தலைப்பில் கல்லூரி ஆராய்ச்சிக் குழு மற்றும் ஐ.க்யூ.ஏ.சி. சார்பில் ஒரு நாள் பயிலரங்கம் நேற்று நடைபெற்றது. இப்பயிற்சியை கல்லூரி முதல்வர் (பொறுப்பு) அலெக்சாண்டர் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். கல்லூரி தேர்வு நெறியாளர் மற்றும் தமிழ்த்துறைத்தலைவர் கற்பகம், விலங்கியல் துறைத்தலைவர் கார்த்திகேயன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். ஆராய்ச்சிக்குழு உறுப்பினர் சீனிவாசன் வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளராக திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பொதுநூலகம் மற்றும் தகவல் அறிவியல் துறை இணைப்பேராசிரியர் பாலசுப்ரமணி கலந்துகொண்டு, ஆராய்ச்சி பட்டம் குறித்த ஆய்வுப்பணியை மேற்கொள்வது குறித்தும், கருத்து திருட்டுகள் இல்லாமல் உருவாக்கும் முயற்சியை ஆய்வாளர்களிடம் நெறியாளர்கள் சரியாக கொண்டு சேர்க்க வேண்டும் என்பது குறித்தும், தரமான ஆய்வுப்பணியே இன்றைய சமூகத்திற்கு தேவை என்றும் கூறினார். இந்தநிகழ்ச்சியில் முதுநிலை மாணவ-மாணவிகள், ஆய்வியல் நிறைஞர் பட்ட ஆய்வாளர்கள், முனைவர் பட்ட ஆய்வாளர்கள் மற்றும் கல்லூரியில் செயல்பட்டு வரும் ஆராய்ச்சித்துறை பேராசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.