ரிஷிவந்தியம் அருகே ஊராட்சி தலைவரை விசாரணைக்காக அழைத்து சென்றதால் பொதுமக்கள் மறியல்


ரிஷிவந்தியம் அருகே ஊராட்சி தலைவரை விசாரணைக்காக அழைத்து சென்றதால் பொதுமக்கள் மறியல்
x
தினத்தந்தி 19 May 2023 12:15 AM IST (Updated: 19 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

ரிஷிவந்தியம் அருகே ஊராட்சி தலைவரை விசாரணைக்காக அழைத்து சென்றதால் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனா்.

கள்ளக்குறிச்சி

ரிஷிவந்தியம்,

ரிஷிவந்தியம் அடுத்த வெங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் நாராயணன் மகன் ரங்கநாதன் (வயது 42). ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார். இவர் மீது கள்ளக்குறிச்சி ஏமப்பேர் பகுதியை சேர்ந்த அய்யாக்கண்ணு மகன் ஆறுமுகம், பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்சினை தொடர்பாக கடந்த மார்ச் மாதம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் கொடுத்தார். இந்த நிலையில் இதுதொடர்பாக விசாரிப்பதற்காக நேற்று காலை ஊராட்சி மன்ற தலைவர் ரங்கநாதனை ரிஷிவந்தியம் போலீஸ் நிலையத்துக்கு போலீசார் அழைத்து சென்றனர். இதுபற்றி அறிந்த ஊராட்சி மன்ற தலைவர் தரப்பினர் மற்றும் முனிவாழையை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் ரிஷிவந்தியம் போலீஸ் நிலையம் எதிரே திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் ஊராட்சி மன்ற தலைவர் ரங்கநாதனை விசாரணைக்காக அழைத்து சென்றதை கண்டித்து கோஷம் எழுப்பினர். இதுபற்றி அறிந்த திருக்கோவிலூர் இன்ஸ்பெக்டர் பாபு மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படு்த்தினார். தொடர்ந்து ஊராட்சி மன்ற தலைவர் ரங்கநாதனை போலீசார் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இருப்பினும் இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story