குடியிருப்பு வீதிகளில் மழைநீர் தேங்குவதால் மக்கள் அவதி


குடியிருப்பு வீதிகளில் மழைநீர் தேங்குவதால் மக்கள் அவதி
x

குடியிருப்பு வீதிகளில் மழைநீர் தேங்குவதால் மக்கள் அவதிப் பட்டு வருகின்றனர். எனவே வடிகால்களை சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது.

கோயம்புத்தூர்

குடியிருப்பு வீதிகளில் மழைநீர் தேங்குவதால் மக்கள் அவதிப் பட்டு வருகின்றனர். எனவே வடிகால்களை சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது.

வடிகால் வசதி சரியில்லை

கோவை நகரில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. ஆனால் நகரில் உள்ள 100 வார்டுகளில் பல இடங்களில் சரியான வடிகால் வசதிகள் இல்லாத நிலை உள்ளது.

சில இடங்களில் மழைநீர் வடிகால் தூர்வாரப்படாமல் பிளாஸ் டிக் கழிவுகளால் அடைக்கப்பட்டு உள்ளது. இதனால் தண்ணீர் ரோட்டில் செல்லும் அவல நிலை உள்ளது.

மேலும் பலத்த மழை பெய்கிற போது வீதிகளில் தண்ணீர் தேங்கி வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. இதனால் வீடுகளில் இருக் கும் பொருட்கள் சேதம் அடைகின்றன. இதன் காரணமாக மக்கள் வீடுகளுக்குள் இருக்க முடியாத நிலை ஏற்படுகிறது.

வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது

அந்த வகையில் கோவை நேற்று முன்தினம் பலத்த மழை பெய்த போது 63-வது வார்டு சண்முகதேவர் வீதி, எல்.எம்.என். வீதி, சவுரிபாளையம் பிரிவு, அஸ்டலட்சுமி அவென்யூ, நாகப்ப வீதி உள்ளிட்ட பல இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.

வாலாங்குளத்தில் இருந்து வெளியேறும் மழைநீர் வடிகால் சரியாக இல்லாததால் திருச்சி சாலையில் பெருகி ஓடுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதிப்படு கின்றனர்.

மேலும் அந்த தண்ணீர் சாக்கடை கால்வாய் வழியாக சென்று தனியார் மருத்துவமனையின் 100 அடி கிணற்றுக்குள் செல்கிறது. அந்த கிணறு நிரம்பி குடியிருப்புகளுக்குள் தண்ணீர் செல்வதால் பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள்.

நிரந்தர தீர்வு தேவை

இது குறித்து அந்த பகுதியை சேர்ந்த விஜயலட்சுமி, கோமளாதேவி ஆகியோர் கூறுகையில், வீடுகளுக்குள் மழை தண்ணீர் புகுந்து பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனால் விடிய, விடிய தண்ணீரை எடுத்து வெளியே ஊற்றினோம். எனவே இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குடியிருப்புகளில் வடிகால் வசதி செய்வதுடன், வாலாங்குளம் தண்ணீர் வடிந்து ஓடுவதை தடுக்க சங்கனூர் ஓடையில் இணைப்பு ஏற்படுத்தும் திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும் என்றனர்..

கலெக்டர் -மேயர் ஆய்வு

கோவை- திருச்சி ரோட்டில் வாலாங்குளம் தண்ணீர் சென்று குடியிருப்புகளில் புகுந்து பாதிப்பு ஏற்படுவதை அறிந்த கலெக்டர் சமீரன் நேற்று மாலை பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர், தண்ணீர் தொடர்ந்து அதிகரிப்ப தை தடுக்க, நீர் செல்லும் பாதையில் மணல் மூட்டைகளை அடுக்கி குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகாமல் தடுக்க அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

கோவை திருச்சி ரோடு பகுதியில் குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்ததை மேயர் கல்பனா மற்றும் அதிகாரிகள் பார்வையிட்ட னர். மோட்டார் வாகனம் மூலம் தேங்கிய மழைநீரை வெளியேற்றுமாறு மேயர் உத்தரவிட்டார்.


Next Story