சாலையில் தேங்கி கிடக்கும் மழை நீரால் பொதுமக்கள் அவதி


சாலையில் தேங்கி கிடக்கும் மழை நீரால் பொதுமக்கள் அவதி
x
தினத்தந்தி 25 Sept 2023 12:15 AM IST (Updated: 25 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பாவூர்சத்திரத்தில் சாலையில் தேங்கி கிடக்கும் மழை நீரால் பொதுமக்கள் பெரிதும் அவதி அடைந்தனர்.

தென்காசி

பாவூர்சத்திரம்:

பாவூர்சத்திரத்தில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் தினசரி சந்தை அருகே நெல்லை- தென்காசி நான்கு வழி சாலையில் இருந்து ஆவுடையானூர் கிராமத்திற்கு செல்லும் சாலை முழுவதும் குண்டும் குழியுமாக காட்சியளிப்பதால் அந்த வழியே செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதி அடைந்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலையில் பெய்த மழையின் காரணமாக மார்க்கெட் சாலை அருகே முகப்பு பகுதியில் மழைநீர் தேங்கி கிடக்கிறது. இதனால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சைக்கிளில் செல்லும் மாணவர்கள் தவறி விழும் சூழ்நிலை ஏற்பட்டது. மேலும் துர்நாற்றம் வீசுவதால் நோய் தொற்று பாதிக்கும் அபாயம் இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். எனவே பெருந்தலைவர் காமராஜர் மார்க்கெட் அருகே குண்டும் குழியுமான சாலையில் தேங்கி நிற்கும் மழை நீர் பள்ளத்தில் மண்ணை கொட்டி நிரப்புவதோடு முறையாக புதிய தார்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story