குடியிருப்பு பகுதியில் சுற்றி திரியும் குரங்குகளால் பொதுமக்கள் அவதி


குடியிருப்பு பகுதியில் சுற்றி திரியும் குரங்குகளால் பொதுமக்கள் அவதி
x

குடியிருப்பு பகுதியில் சுற்றி திரியும் குரங்குகளால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.

விருதுநகர்

வத்திராயிருப்பு,

வத்திராயிருப்பில் உள்ள நாடார் பஜார் பகுதி, மகாராஜபுரம் செல்லும் சாலை, ரோட்டாடி தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குரங்குகள் சுற்றி திரிகின்றன. இந்த குரங்குகள் வீட்டின் மாடியில் உலர வைத்திருக்கும் சமையல் பொருட்கள் மற்றும் துணிகளை சேதப்படுத்தி வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். குரங்குகள் ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டு பொதுமக்களை அச்சுறுத்துவதுடன், இருசக்கர வாகனங்களில் செல்பவர்களையும் துரத்துகின்றது. இதனால் சிறு, சிறு விபத்துகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. ஆதலால் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் குரங்குகளை பிடித்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story