ஒன்றிய கவுன்சிலர்கள் 6 பேர் ராஜினாமா கடிதம்


ஒன்றிய கவுன்சிலர்கள் 6 பேர் ராஜினாமா கடிதம்
x

காவேரிப்பாக்கம் ஒன்றியத்தில் முடிக்கப்பட்ட பணிகளுக்கு பணம் விடுவிக்கவில்லை எனக்கூறி 6 கவுன்சிலர்கள் ராஜினாமா கடிதம் அளித்துள்ளனர்.

ராணிப்பேட்டை

ஒன்றியக்குழு கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் ஒன்றியக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் அனிதா குப்புசாமி தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் சையுப்தீன் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் கவுன்சிலர்கள் இதுவரைக்கும் முடிக்கப்பட்ட பணிகளுக்கான நிதியை விடுவிக்க வேண்டும். புதிய பணிகளை ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அப்போது ஒன்றியக்குழு தலைவர் அனிதா குப்புசாமி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

ராஜினாமா கடிதம்

கூட்டம் முடிந்தவுடன் 1-வது வார்டு முனியம்மாள், 2-வது வார்டு ராணி, 3-வது வார்டு கோமதி, 4-வது வார்டு மாரிமுத்து, 5-வது வார்டு யுவராஜ், 8-வது வார்டு தீபா ஆகிய 6 கவுன்சிலர்களும் முடிக்கப்பட்ட பணிகளுக்கு நிதியை விடுவிக்கவில்லை என்று கூறி வட்டார வளர்ச்சி அலுவலர் சையுப்தீனை சந்தித்து ராஜினாமா கடிதம் அளித்தனர்.

ராஜினாமா கடிதத்தை திரும்பப் பெறுமாறு வட்டார வளர்ச்சி அலுவலர் கூறியபோதும், கவுன்சிலர்கள் திரும்பபெறாமல் அங்கிருந்து சென்றுவிட்டனர்.

இதுக்குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் சையுப்தீனிடம் கேட்டபோது ஒன்றியம் முழுவதும் முடிக்கப்பட்ட பணிகளுக்கு முறையாக நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. முடிவு பெறாத பணிகளை முறையாக முடித்தால்தான் நிதி விடுவிக்கப்படும் என்று கூறினார். இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story