உயர் அழுத்த மின்கம்பிகள் அமைக்க எதிர்ப்பு:அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதம்:தேவதானப்பட்டியில் பரபரப்பு


உயர் அழுத்த மின்கம்பிகள் அமைக்க எதிர்ப்பு:அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதம்:தேவதானப்பட்டியில் பரபரப்பு
x
தினத்தந்தி 29 July 2023 12:15 AM IST (Updated: 29 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தேவதானப்பட்டியில் உயர் அழுத்த மின்கம்பிகள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தேனி

தேவதானப்பட்டி ஜெயமங்கலம் சத்யா நகர் பகுதியில் மிகக் குறுகலான தெருக்களில் உயர் மின்னழுத்த வழித்தடங்கள் அமைக்க அதிகாரிகள் முடிவு செய்தனர். இதற்காக அந்த பகுதியில் உயர் அழுத்த மின்கம்பிகள் அமைக்கும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அங்குள்ள தெருக்களில் வீடுகளுக்கு அருகே மின்கம்பங்கள் ஊன்றப்பட்டன.

இந்நிலையில் நேற்று முன்தினம் மின்வாரிய ஊழியர்கள் மின் கம்பிகள் அமைப்பதற்கான உபகரணங்களுடன் வந்தனர். இதைக்கண்ட பொதுமக்கள் மின்கம்பிகள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஜெயமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் பொதுமக்கள் மற்றும் ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனைத் தொடர்ந்து ஊழியர்கள் வேலையை நிறுத்திவிட்டு அங்கிருந்து திரும்பி சென்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Related Tags :
Next Story