ஏரியில் மண் எடுக்க எதிர்ப்பு
ஏரியில் மண் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
ராணிப்பேட்டை
வாலாஜா ஒன்றியம் செங்காடு மோட்டூர் பகுதியில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரியில் மண் அள்ளுவதற்கு நெடுஞ்சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தனியார் நிறுவனம் முயற்சித்து உள்ளது. ஏற்கனவே அந்தப் பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏரியில் மண் எடுப்பதற்காக கொண்டுவரப்பட்ட எந்திரங்களை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் ஏரியில் மண் அள்ளக்கூடாது என வலியுறுத்தி வாலாஜா ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து புகார் மனு அளித்தனர்.
Related Tags :
Next Story