மரம் முறிந்து மின்கம்பத்தில் விழுந்ததால் மின்தடை


மரம் முறிந்து மின்கம்பத்தில் விழுந்ததால் மின்தடை
x

கிணத்துக்கடவு பழைய போலீஸ் நிலையம் அருகே, மரம் முறிந்து மின்கம்பத்தில் விழுந்ததால் மின் தடை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்

கோயம்புத்தூர்

கிணத்துக்கடவு

கிணத்துக்கடவு பழைய போலீஸ் நிலையம் அருகே, மரம் முறிந்து மின்கம்பத்தில் விழுந்ததால் மின் தடை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

மரம் முறிந்து விழுந்தது

கிணத்துக்கடவு மேம்பாலம் அருகே புதிய போலீஸ் நிலையம் உள்ளது. அதற்கு முன் பழைய போலீஸ் நிலைய கட்டிடம் உள்ளது. நேற்று முன்தினம் பழைய போலீஸ் நிலைய கட்டிடத் தின் அருகே இருந்த பழமை வாய்ந்த ஆலமரம் திடீரென முறிந்து அருகில் இருந்த மின்கம்பம் மீது விழுந்தது.

இதனால் அந்த பகுதியில் மின்தடை ஏற்பட்டது. இதுபற்றி அந்த பகுதி மக்கள், உடனடியாக கிணத்துக்கடவு மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து கிணத்துக்கடவு மின்வாரிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மின் இணைப்பை துண்டித்து, சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர்.

பொதுமக்கள் அவதி

மின்கம்பம் மீது மரம் விழுந்ததால் கிணத்துக்கடவு மெயின் ரோடு, பெரியர் நகர், அண்ணா நகர் உள்ளிட்ட பல இடங்களில் மின்சாரம் வினியோகம் மாலை 3 மணி முதல் இல்லாமல் இருந்ததால் பொதுமக்கள், வியாபாரிகள் கடும் அவதிக்குள்ளானார்கள்.


Next Story