பாலாற்றில் மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம்
பாலாற்றில் மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராமசபை கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
வேலூர்
குடியாத்தம் ஒன்றியத்திற்குட்பட்ட கூத்தம்பாக்கம்-அனங்காநல்லூர் இடையே பாலாற்றில் மணல் குவாரி அமைப்பதற்கு தமிழக அரசு உத்தேசித்துள்ளது. இதற்கு, அந்தப்பகுதியை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மணல் குவாரி தொடர்பான கருத்து கேட்பு கூட்டத்திலும், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில் அகரம்சேரி, கூத்தம்பாக்கம், அனங்காநல்லூர், கொத்தகுப்பம் ஆகிய ஊராட்சிகளில் நடந்த கிராம சபை கூட்டத்தில், பாலாற்றில் மணல் குவாரி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் பாலாற்றுபடுகையில் கூத்தம்பாக்கம்- அகரஞ்சேரி இடையே தடுப்பணைகள் கட்ட வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Related Tags :
Next Story