கிரானைட் குவாாியை தடை செய்ய வலியுறுத்தி தீா்மானம்


கிரானைட் குவாாியை தடை செய்ய வலியுறுத்தி தீா்மானம்
x

கிரானைட் குவாாியை தடை செய்ய வலியுறுத்தி தீா்மானம்

திருப்பூர்

காங்கயம்,

காங்கயம் அருகே உள்ள சிவன்மலை ஊராட்சியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராமசபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊராட்சி தலைவா் கே.கே.துரைசாமி தலைமை தாங்கினாா். அப்போது சிவன்மலை கிராமத்தில் அமைந்துள்ள கிரானைட் குவாாியால் நில அதிா்வு, விவசாய நிலங்கள் சேதம்,வீடுகளில் விாிசல், நிலம் மற்றும் நீா் மாசுபாடு,பறவைகள் மற்றும் கால்நடைகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.

மேலும் புகழ்பெற்ற சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவில் அருகில் உள்ளது. எனவே அந்த கிரானைட் குவாாிக்கு தடைவிதிக்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடா்ந்து ஊராட்சியில் நடைபெற்ற பணிகள் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை நடைபெற்றது. இதில் அரசு அதிகாாிகள், ஊராட்சி செயலா், வாா்டு உறுப்பினா்கள், விவசாயிகள், பொதுமக்கள் என ஏராளமானோா் கலந்து கொண்டனா்.



Next Story