தேசிய லோக் அதாலத்தில் 461 வழக்குகளுக்கு தீர்வு
பொள்ளாச்சியில் நடந்த தேசிய லோக் அதாலத்தில் 461 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
பொள்ளாச்சி
பொள்ளாச்சியில் நடந்த தேசிய லோக் அதாலத்தில் 461 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
தேசிய லோக் அதாலத்
நாடு முழுவதும் நிலுவையில் உள்ள வழக்குளை குறைக்கும் வகையில் தேசிய லோக் அதாலத் (தேசிய மக்கள் நீதிமன்றம்) நடைபெறுவது வழக்கம். அதன்படி பொள்ளாச்சி சப்-கோர்ட்டில் நேற்று லோக் அதாலத் நடைபெற்றது. இதற்கு குண்டு வெடிப்பு வழக்குகளை விசாரிக்கும் கோவை மாவட்ட நீதிபதி பாலு தலைமை தாங்கினார். இதில் சிறப்பு நீதிபதி இந்துலதா, உறுப்பினர் வக்கீல் குமார், வக்கீல்கள் சங்க தலைவர் துரை, செயலாளர் கணேசன், வக்கீல்கள் அருள்பிரகாஷ், ஜம்பு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
சமரச தீர்வு
மோட்டார் வாகன விபத்துகள் 9 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இதன் மூலம் ரூ.40 லட்சத்து 30 ஆயிரம் இழப்பீடு வழங்கப்பட்டது. சிவில் உரிமையியல் வழக்கு 12 விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, 4 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, ரூ.12 லட்சத்து 76 ஆயிரத்துக்கு சமரசம் செய்யப்பட்டது. கடன் வசூல் வழக்கில் 12 வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, 5 தீர்வு காணப்பட்டது. இதன் மூலம் ரூ.28 லட்சத்து 31 ஆயிரத்து 478-க்கு சமரசம் ஆனது.
இதேபோன்று காசோலை மோசடி வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, அவற்றிற்கு தீர்வு காணப்பட்டன.
இதில் சப்-கோர்ட்டு, மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், கூடுதல் உரிமையியல் நீதிமன்றம், ஜே.எம். 1, ஜே.எம்.2 ஆகிய கோர்ட்டுகளில் உள்ள 4423 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதில் 461 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இதன் மூலம் ரூ.2 கோடியே 21 லட்சத்து 94 ஆயிரத்துக்கு 378-க்கு சமரசம் செய்யப்பட்டது.