நெல்லையில் தேவர் சிலைக்கு மரியாதை


நெல்லையில் தேவர் சிலைக்கு மரியாதை
x

நெல்லையில் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

திருநெல்வேலி

நெல்லையில் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தேவர் ஜெயந்தி விழா

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி நெல்லை சந்திப்பு பகுதியில் உள்ள தேவர் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பா.ஜனதா- நாம் தமிழர்

பா.ஜனதா சார்பில் வடக்கு மாவட்ட தலைவர் தயாசங்கர் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் நாகராஜன், வெங்கடாசலபதி, நிர்வாகிகள் மேகநாதன், டி.வி.சுரேஷ், வேல்ஆறுமுகம், மார்க்கெட் கணேசன் மற்றும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

நாம் தமிழர் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் கண்ணன், மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் சத்யா, மாவட்ட தலைவர் ராஜசேகர் மாலை அணிவித்தனர்.

பால்குடம் ஊர்வலம்

இந்து மக்கள் கட்சி சார்பில் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு நெல்லை தைப்பூச மண்டபத்தில் இருந்து 101 பால்குடம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு தேவர் சிலைக்கு பால்அபிஷேகம் நடந்தது. இதில் மாநில துணை தலைவர் முத்து அரங்கசாமி, தென்மண்டல தலைவர் ராஜாபாண்டியன், மாவட்ட தலைவர் மாரியப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

அதே போல் நெல்லை மாவட்ட அகில இந்திய பார்வர்டு பிளாக் சார்பில் மாவட்ட செயலாளர் பாலு தலைமையில் தேவர் சிலைக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் சில்வர் பாண்டியன், மணி பாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மூவேந்தர் சேனா சார்பில் நிறுவன தலைவர் தென்மாறன் கலந்து கொண்டு, தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் தலைமை நிலைய செயலாளர் முத்துராமலிங்கம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

பகுஜன் சமாஜ்

நெல்லை மாவட்ட பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் மாநில செயலாளர் தேவேந்திரன் தலைமையில் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நெல்லை மாவட்ட தலைவர் சிவசுப்பிரமணியன், நெல்லை சட்டமன்ற செயலாளர் சிவக்குமார், பாளையங்கோட்டை சட்டமன்ற செயலாளர் சுரேஷ், பொருளாளர் மோசஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story