போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் பொறுப்பேற்பு
போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் பொறுப்பேற்பு
கோவை, ஜூன்.14-
கோவை மாநகர போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனராக பணிபுரிந்த செந்தில்குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து அவருக்கு பதிலாக நெல்லை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டாக பணிபுரிந்த மதிவாணன் கோவை மாநகர் போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனராக நியமிக்கப்பட்டார். இதனைத்தொடர்ந்து கோவை மாநகர் போலீஸ் கமிஷனர் அலுவலக வளாகத்தில் உள்ள துணை கமிஷனர் அலுவலகத்தில் நேற்று மதிவாணன் பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.
அதன்பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கோவை மாநகரில் விபத்துகளினால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளி மாணவர்கள் மோட்டார் சைக்கிள் ஓட்டுவது கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளியில் படிக்கும் தங்களது பிள்ளைகளுக்கு மோட்டார் சைக்கிள் வாங்கி கொடுப்பதை பெற்றோர்கள் தவிர்க்க வேண்டும் என்றார். பதவி ஏற்றுக்கொண்ட அவருக்கு போக்குவரத்து போலீஸ் உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள் மற்றும் அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.