செங்கோட்டை நகராட்சி பெண் ஆணையாளர் பொறுப்பேற்பு


செங்கோட்டை நகராட்சி பெண் ஆணையாளர் பொறுப்பேற்பு
x

செங்கோட்டை நகராட்சி பெண் ஆணையாளராக பார்கவி பொறுப்பேற்றுக் கொண்டார்.

தென்காசி

செங்கோட்டை:

செங்கோட்டை நகராட்சி ஆணையாளராக பணியாற்றி வந்த இளவரசன், சாத்தூர் நகராட்சிக்கு மாறுதலாகி சென்றுவிட்டார். இவருக்கு பதிலாக அம்பை நகராட்சியில் பெண் ஆணையாளராக பணியாற்றி வந்த பார்கவி, செங்கோட்டை நகராட்சி ஆணையளராக பொறுப்பு ஏற்றுக்கொண்டார். அவருக்கு நகரசபை தலைவர் ராமலட்சுமி, நகராட்சி மேலாளர் ரத்தினம், பொறியாளர் கண்ணன், சுகாதார அலுவலர் ராமச்சந்திரன், சுகாதார ஆய்வாளர் பழனிச்சாமி மற்றும் அலுவலக ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.


Next Story