சீரமைக்கப்பட்ட வாஞ்சிநாதன் சிலை-நகரசபை தலைவர் திறந்து வைத்தார்
செங்கோட்டையில் சீரமைக்கப்பட்ட வாஞ்சிநாதன் சிலையை நகரசபை தலைவர் திறந்து வைத்தார்
தென்காசி
செங்கோட்டை:
செங்கோட்டையில் பஸ்நிலையம் அருகில் சுதந்திர போராட்ட வீரர் வாஞ்சிநாதன் சிலை 1986-ம் ஆண்டு ஜூன் 17-ந் தேதி திறக்கப்பட்டது.
இந்தநிலையில் செங்கோட்டை நகரசபை தலைவர் ராமலெட்சுமி அந்த சிலையை வெண்கல கலரில் வர்ணம் பூசி அழகு படுத்துவதற்காக ஏற்பாடு செய்து இருந்தார்.
சிலையை வெண்கலத்தால் வர்ணம் பூசும் பணிகள் மற்றும் சீரமைக்கும் பணிகள் கடந்த நவம்பர் மாதம் முதல் நடந்து வந்தது. பணிகள் முடிந்ததும் சிலை முழுவதும் துணியால் மறைக்கப்பட்டு வைத்து இருந்தனர்.
நேற்று குடியரசு தினத்தை முன்னிட்டு சீரமைக்கப்பட்ட வாஞ்சிநாதன் வெண்கல முழு உருவச்சிலையை நகரசபை தலைவர் ராமலட்சுமி திறந்து வைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியில் நகர்மன்ற துணைத்தலைவர் நவநீதகிருஷ்ணன், நகர்மன்ற உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story