தீபாவளியை முன்னிட்டு சென்னை பொதுமக்களுக்கு கட்டுப்பாடுகள்


தீபாவளியை முன்னிட்டு  சென்னை பொதுமக்களுக்கு கட்டுப்பாடுகள்
x

பசுமை பட்டாசுகள் மட்டுமே விற்கப்படவும், வெடிக்கப்படவும் வேண்டும்"

சென்னை,

தீபாவளியை முன்னிட்டு பட்டாசு வெடிக்க சென்னை பெருநகர காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

பட்டாசு வெடிக்க விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் :

* பசுமை பட்டாசுகள் மட்டுமே விற்கப்படவும், வெடிக்கப்படவும் வேண்டும்"

*காலை 6-7 மணி வரையிலும், மாலை 7-8 மணி வரையிலும் மட்டுமே பட்டாசுகள் வெடிக்க வேண்டும்"

*"125 டெசிபல் அளவுக்கு மேல் ஓசை எழுப்பும் பட்டாசுகளை தயாரிக்கவோ, பயன்படுத்தவோ கூடாது"

*சீன தயாரிப்பு வெடிகளை விற்கவோ, பயன்படுத்தவோ, வெடிக்கவோ கூடாது"

*எளிதில் தீப்பிடிக்கும் பொருட்கள் உள்ள இடம், வாகன நிறுத்தம், பெட்ரோல் நிலையங்கள் அருகில் பட்டாசு வெடிக்கக் கூடாது"

*"பட்டாசுகளை தூக்கி எறிந்து விளையாடக் கூடாது-குழந்தைகளை தனியாக பட்டாசு வெடிக்க அனுமதிக்கக் கூடாது"

*"குடிசைகள், கால்நடைகள் அருகில் பட்டாசு வெடிக்கக் கூடாது" குடிசைகள், கால்நடைகள் அருகில் பட்டாசு வெடிக்கக் கூடாது என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும் தீ விபத்துக்கள் ஏதும் நிகழ்ந்தால் அவசர உதவி எண்களுக்கு அழைத்து அசம்பாவிதங்களைத் தவிர்க்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது


Next Story