பிளஸ்-1 தேர்வில் மாநில அளவில் 8-வது இடம்


பிளஸ்-1 தேர்வில் மாநில அளவில் 8-வது இடம்
x

பிளஸ்-1 தேர்வில் சிவகங்கை மாவட்டம் மாநில அளவில் 8-வது இடத்தை பெற்றது. 61 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.

சிவகங்கை


பிளஸ்-1 தேர்வில் சிவகங்கை மாவட்டம் மாநில அளவில் 8-வதுஇடத்தை பெற்றது. 61 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.

8-வது இடம்

தமிழகம் முழுவதும் பிளஸ்-1 தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. சிவகங்கை மாவட்டத்தில் இந்த தேர்வை 162 பள்ளிகளில் 7,782 மாணவர்களும் 8,746 மாணவிகளும் சேர்த்து 16,528 பேர் தேர்வு எழுதினர். இவர்களில் 7,056 மாணவர்களும், 8,467 மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். இது 93.92 சதவீத தேர்ச்சி ஆகும்.

பிளஸ்-1 தேர்வில் மாநில அளவில் சிவகங்கை மாவட்டம் 8- வது இடத்தில் தேர்ச்சி பெற்று உள்ளது.

100 சதவீதம்

நடைபெற்ற தேர்வில் 61 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்று உள்ளன. இந்த தகவலை முதன்மை கல்வி அலுவலர் சாமிநாதன் தெரிவித்தார்.


Next Story