ஓய்வு பெற்ற மத்திய போலீஸ் படை சப்-இன்ஸ்பெக்டர் சாவு


ஓய்வு பெற்ற மத்திய போலீஸ் படை சப்-இன்ஸ்பெக்டர் சாவு
x

கீழையூரில் மோட்டார் சைக்கிள்-ஸ்கூட்டர் மோதி கொண்ட விபத்தில் ஓய்வு பெற்ற மத்திய போலீஸ் படை சப்-இன்ஸ்பெக்டர் உயிரிழந்தார்.

நாகப்பட்டினம்

வேளாங்கண்ணி:

நாகை மாவட்டம் கீழையூர் நாடார் தெருவை சேர்ந்தவர் அருள்தாஸ் (வயது 55). மத்திய போலீஸ் படையில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் நேற்று முன்தினம் காலை வீட்டில் இருந்து வேளாங்கண்ணிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.கீழையூர் கிழக்கு கடற்கரை சாலையில் காரைநகர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது முன்னால் ஸ்கூட்டரில் சென்றவர் திடீரென திருப்பத்தில் திரும்பிய போது எதிர்பாராதவிதமாக அருள்தாஸ் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டர் மீது மோதியது.இதில் நிலைதடுமாறி கீழே விழுந்து அருள்தாஸ் படுகாயம் அடைந்தார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கீழையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story