ஓய்வுபெற்ற சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


ஓய்வுபெற்ற சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x

வண்ணார்பேட்டையில் ஓய்வுபெற்ற சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

திருநெல்வேலி

தமிழ்நாடு ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியர் நலச்சங்கத்தினர் நெல்லை வண்ணார்பேட்டையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். மாநில அமைப்பாளர் ஆறுமுகம் தலைமை தாங்கி, ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

பண்டிகை முன்பணம் ரூ.4 ஆயிரம் வழங்க வேண்டும். மருத்துவ படி ரூ.300 வழங்க வேண்டும். பொங்கல் போனஸ் இதுவரை வழங்கப்படவில்லை. இதை உடனே வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில் நிர்வாகிகள் சுப்புலட்சுமி, முருகன், நடேசன், பால்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story