ஓய்வு பெற்ற அரசு பஸ் டிரைவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஓய்வு பெற்ற அரசு பஸ் டிரைவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து கூடலூர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.
நீலகிரி
கூடலூர்,
கூடலூர் பகுதியை சேர்ந்தவர் மணி (வயது 54). இவர் அரசு பஸ் டிரைவராக பணிபுரிந்து வந்தார். கடந்த 2006-ம் ஆண்டு மணி 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் கூடலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக மணியை கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை கூடலூர் நீதிமன்றத்தில் கடந்த 16 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மணிக்கு 2 ஆண்டு கடுங்காவல் சிறைத்தண்டனையும், ரூ.ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. தற்போது மணி பணியில் இருந்து ஓய்வு பெற்று உள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story