ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பெரம்பலூர்
பெரம்பலூரில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் செல்வராஜ் தலைமையில் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 7-வது ஊதியக்குழு பரிந்துரையின்படி 21 மாத நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய மருத்துவ நிலுவைத்தொகையை வழங்க வேண்டும். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்ற தேர்தலின்போது அளித்த தேர்தல் வாக்குறுதியின்படி நிர்வாக தீர்ப்பாயம் அமைக்க வேண்டும். குடும்ப பாதுகாப்பு நிதி சந்தாவை ரூ.80-ல் இருந்து ரூ.150 ஆக உயர்த்தியதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
Related Tags :
Next Story