ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் வீட்டில் நகை, பொருட்கள் கொள்ளை


ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்  வீட்டில் நகை, பொருட்கள் கொள்ளை
x

நாசரேத்தில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் வீட்டில் நகை, பொருட்கள் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

தூத்துக்குடி

நாசரேத்:

நாசரேத்தில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் வீட்டில் 3 பவுனநகை, மோட்டார் ைசக்கிள் உள்ளிட்ட பொருட்களை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

ஓய்வுபெற்றதலைமை ஆசிரியர்

நாசரேத் கதீட்ரல் ரோட்டில் வசித்து வருபவர் அகஸ்டின் ஸ்பர்ஜன். இவர் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர். இவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகள் திருமணம் ஆகி அமெரிக்காவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். மகன் நாசரேத் வீட்டில் இருந்து ஐ.டி. நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அகஸ்டின் ஸ்பர்ஜன் மனைவி இறந்து விட்டதால் இறப்புக்கு வந்த மகள் தனது தந்தையை அமெரிக்காவிற்கு கூட்டி சென்றுள்ளார். மகன் அன்செல் சில்வான்ஸ், மனைவி ஐஸ்வர்யா மோனிகா உடன் நாசரேத் வீட்டில் வசித்து வருகிறார்.

வீடுபுகுந்து கொள்ளை

இந்நிலையில் கடந்த 23-ந்தேதி சென்னையில் உள்ள வீட்டை பார்ப்பதற்காக மனைவியுடன் அன்செல் சில்வான்ஸ் சென்றார். இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நேற்று முன்தினம் இரவில் முன்பக்க கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். பீரோக்களை உடைத்து . பீரோவில் இருந்த 3 பவுன் சங்கிலி, மோதிரம், டி.வி. மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை திருடி சென்று விட்டனர். மேலும் வீட்டிலிருந்த கண்காணிப்பு கேமரா பெட்டியையும் மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.

போலீசார் வலைவீச்சு

இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ராய்ட்சன் வழக்குப்பதிவு செய்து இந்த வீட்டில் கைவரிசை காட்டிய மர்ம நபர்களை தேடிவருகிறார். மேலும், கைரேகை சப்- இன்ஸ்பெக்டர் வைஜெயந்தி மாலா தலைமையிலான குழுவினர் வீட்டில் பதிவாகியிருந்த மர்ம நபர்களின் ரேகைகளை பதிவு செய்து ஆய்வு நடத்தி வருகின்றனர்.


Next Story