விழுப்புரத்தில் ஓய்வு பெற்ற அலுவலர் சங்க அமைப்பு தின விழா


விழுப்புரத்தில் ஓய்வு பெற்ற அலுவலர் சங்க அமைப்பு தின விழா
x
தினத்தந்தி 6 March 2023 12:15 AM IST (Updated: 6 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரத்தில் ஓய்வு பெற்ற அலுவலர் சங்க அமைப்பு தின விழா நடைபெற்றது.

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்ட ஓய்வு பெற்ற அலுவலர் சங்கத்தின் 24-வது ஆண்டு அமைப்பு தின விழா விழுப்புரத்தில் நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட துணைத்தலைவர் சிவனேசன் தலைமை தாங்கினார். மாவட்ட பிரசார செயலாளர் லட்சுமிபாய், விழுப்புரம் வட்ட துணைத்தலைவர் ராஜேந்திரன், முன்னாள் வட்ட பொருளாளர் முத்துகிருஷ்ணன், வட்ட இணைச்செயலாளர் பர்ணபாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழுப்புரம் வட்ட செயலாளர் குணசேகரன் வரவேற்றார். வட்ட தலைவர் செல்வராஜ், சங்க கொடியேற்றி வைத்தார். மாவட்ட தலைவர்கள் கள்ளக்குறிச்சி குணசேகர், விழுப்புரம் ரகுபதி, மாவட்ட இணை செயலாளர் துரைக்கண்ணு, மூத்த உறுப்பினர் ஜெயராமன், மாவட்ட அமைப்பு செயலாளர் சுந்தர்ராஜன், பொருளாளர் கலியமூர்த்தி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

இவ்விழாவில், ஓய்வூதியம் வழங்கும் அறிவிப்பை வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் உடனே நிறைவேற்ற தமிழக முதல்-அமைச்சரை கேட்டுக்கொள்வது, தமிழக அரசின் மருத்துவ காப்பீடு திட்டத்தில் உள்ள குறைபாடுகளையும், குளறுபடிகளையும் நீக்கி இலவசமாக சிகிச்சை பெறும் வகையில் மருத்துவ காப்பீடு திட்டத்தை முறைப்படுத்த வேண்டும் என்பன போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் வட்ட பொருளாளர் நடராஜன் நன்றி கூறினார்.

1 More update

Next Story