ஓய்வுபெற்ற அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்


ஓய்வுபெற்ற அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
x

விழுப்புரத்தில் ஓய்வுபெற்ற அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

விழுப்புரம்

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே ஓய்வுபெற்ற அலுவலர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் ரகுபதி தலைமை தாங்கினார். வட்ட துணைத்தலைவர் ராஜேந்திரன், இணை செயலாளர் பர்னபாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்ட தலைவர் செல்வராசு வரவேற்றார். மாவட்ட செயலாளர் அருணகிரி, ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து கோரிக்கை முழக்கமிட்டார். அமைப்பு செயலாளர் சுந்தரராஜன், இணை செயலாளர் துரைக்கண்ணு ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். 1.1.2022 முதல் 3 சதவீத அகவிலைப்படியை உடனே வழங்க வேண்டும், குடும்ப பாதுகாப்பு நிதியை ரூ.1 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட துணைத்தலைவர் சிவநேசன், பொருளாளர் கலியமூர்த்தி, தொலைதொடர்புத்துறை ஒப்பந்த அடிப்படை பணியாளர் சங்க மாவட்ட செயலாளர் செல்வம் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் வட்ட பொருளாளர் நடராஜன் நன்றி கூறினார்.


Next Story