தெரு நாய்களை சுட்டுக்கொன்றதாக ஓய்வு பெற்ற பேராசிரியர் கைது
தெரு நாய்களை சுட்டுக்கொன்றதாக ஓய்வு பெற்ற பேராசிரியர் கைது செய்யப்பட்டார்.
திருச்சி
திருச்சி கருமண்டபம், குறிஞ்சி தெருவைச் சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 60). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். அரசு உரிமம் பெற்று ஏர்கண் எனப்படும் இரட்டைக் குழல் துப்பாக்கி வைத்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் அவர் ஒரு தெரு நாயை சுட்டதாகவும், அந்த நாய் காலில் காயத்துடன் தப்பிச்சென்றதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து அந்த பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவர் அவசர எண் 100-ஐ தொடர்பு கொண்டு புகார் செய்தார். அதன்பேரில் கண்டோன்மெண்ட் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது அவர் ஏற்கனவே 2 தெரு நாய்களை சுட்டு கொன்றதாக தெரியவந்தது. உடனே சிவக்குமாரை கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story