ஓய்வு பெற்ற வருவாய்த்துறை அலுவலர் சங்க கூட்டம்


ஓய்வு பெற்ற வருவாய்த்துறை அலுவலர் சங்க கூட்டம்
x

நெல்லையில் ஓய்வு பெற்ற வருவாய்த்துறை அலுவலர் சங்க கூட்டம் நடந்தது.

திருநெல்வேலி

நெல்லை கலெக்டர் அலுவலக வளாகத்தில் பணிநிறைவு பெற்ற வருவாய் துறை அலுவலர் சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. தலைவர் முத்துசாமி தலைமை தாங்கினார். பொருளாளர் சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார். இணை செயலாளர் முத்து முகமது வரவேற்றார். இதில் டாக்டர் இளங்கோ, அக்கு பஞ்சர் சிகிச்சை குறித்தும், ஜேம்ஸ் வெள்ளத்துரை, காதர் அவுலியா, செல்வராஜ் ஆகியோர் பல்வேறு தலைப்புகளிலும் பேசினார்கள்.கூட்டத்தில், தமிழக அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். தாசில்தார், மாவட்ட வருவாய் அலுவலர் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. செயற்குழு உறுப்பினர் அடைக்கலம் நன்றி கூறினார்.


Next Story