ஓய்வு பெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்


ஓய்வு பெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
x

தூத்துக்குடியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வு பெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வுபெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி மாவட்ட ஓய்வு பெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர் நலச்சங்கம் சார்பில் சிதம்பரநகர் பஸ் நிறுத்தம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் பெ.சாம்பசிவன் தலைமை தாங்கினார். வட்ட செயலாளர் த.சம்பத் சாமுவேல் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் எம்.ஏ.எச்.முத்தையா கோரிக்கைகளை விளக்கி பேசினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் பே.சங்கரலிங்கம், அனைத்து துறை ஓய்வூதியர் சங்க செயலாளர் ராமமூர்த்தி, பி.எஸ்.என்.எல் ஓய்வூதியர் சங்கத்தை சேர்ந்த பி.ராமர் ஆகியோர் பேசினர். சிறப்பு அழைப்பாளராக சங்கத்தின் மாநில இணை செயலாளர் வெ.லீலாவதி கலந்து கொண்டு பேசினார்.

கோரிக்கைகள்

ஆர்ப்பாட்டத்தில் தன் பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். மத்திய அரசு வழங்கி உள்ள அகவிலைப்படி நிலுவையை உடனடியாக வழங்க வேண்டும். புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் உள்ள குளறுபடிகளை களைய வேண்டும். குடும்ப நலநிதி உடனடியாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் ஓய்வு பெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.


Next Story