ஓய்வு பெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர் நலச்சங்க புதியநிர்வாகிகள் தேர்வு
ஓய்வு பெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர் நலச்சங்க புதியநிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்
தூத்துக்குடி வட்ட கிளை ஓய்வு பெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர் நலச்சங்க புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் பேரவை கூட்டம் தூத்துக்குடியில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் நடந்தது. கூட்டத்தில் தேர்தல் ஆணையாளராக ரகுநாதன், துணை ஆணையாளராக ராமகிருஷ்ணன் ஆகியோர் செயல்பட்டனர். கூட்டத்தில் வட்டக்கிளை தலைவராக செ.ஞானசேகர், செயலாளராக பா.செல்வராஜ், பொருளாளராக பி.ஜோசப் கிளாரன்ஸ், துணைத்தலைவர்களாக சாந்தகுமாரி, ம.வின்னிபிரட் பர்னாண்டோ, பீட்டர் பத்திநாதன், இணைச் செயலாளர்களாக ஜி.பன்னீர்செல்வம் மனோகர் சிங், எஸ்.முத்துராஜா, ஜோ.அன்பு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்ட பொறுப்பாளர்கள் பணி சிறக்க மாவட்ட தலைவர் சாம்பசிவன், மாவட்ட செயலாளர் முத்தையா, பொருளாளர் கண்ணையா, மாநில பொதுக்குழு உறுப்பினர் சங்கரலிங்கம், இணை செயலாளர் லீலாவதி ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
கூட்டத்தில் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கிளை இணை செயலாளர் பன்னீர் செல்வம் மனோகர் சிங் நன்றி கூறினார்.