ஓய்வுபெற்ற ராணுவ வீரர்கள் மலேசியாவில் பாதுகாப்பு பணிக்கு வரலாம்-மலேசிய உள்துறை மந்திரி பேட்டி


ஓய்வுபெற்ற ராணுவ வீரர்கள் மலேசியாவில் பாதுகாப்பு பணிக்கு வரலாம்-மலேசிய உள்துறை மந்திரி பேட்டி
x

இந்தியாவில் ஓய்வுபெற்ற ராணுவ வீரர்கள் மலேசியாவில் பாதுகாப்பு பணிக்கு வரலாம் என மலேசிய உள்துறை மந்திரி கூறினார்.

பெரம்பலூர்

மலேசிய நாட்டின் உள்துறை மந்திரி டத்தோ ஹம்சாபின் ஜெய்னுதீன் மலேசிய நாட்டில் தொழில் அதிபராக உள்ள பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த டத்தோ பிரகதீஸ் குமாரின் பூலாம்பாடியில் உள்ள வீட்டிற்கு வந்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-15 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தற்போது தமிழகம் வந்துள்ளேன். தமிழகத்தில் இருந்து மலேசிய நாட்டிற்கு செல்லும் தொழிலாளர்களுக்கு வயது வரம்பு 45 ஆக வைத்திருப்பது சுறுசுறுப்புடன் மலேசிய நாட்டில் வேலை செய்ய வேண்டும் என்பதற்காகத்தான். இருப்பினும் இதனை மாற்றி அமைப்பது குறித்து மலேசிய நாட்டு தொழிலாளர் நலத்துறை அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தி சரி செய்ய ஏற்பாடு செய்கிறேன். 50 ஆயிரம் அமெரிக்க டாலர் முதலீடு இருந்தால் மலேசியாவில் யார் வேண்டுமானாலும் தொழில் தொடங்கலாம். பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதற்காக இந்தியாவில் ஓய்வுபெற்ற ராணுவ வீரர்கள் தாராளமாக வரலாம். மலேசிய நாட்டில் 20 ஆண்டுகள் தங்குவதற்கு இன்வெஸ்ட்மெண்ட் விசா என்று அழைக்கப்படும் பிரீமியம் விசா எடுத்துக்கொள்ள வேண்டும். தகுதியானவர்கள் எப்போது வேண்டுமானாலும் இதற்கு விண்ணப்பிக்கலாம். கொரோனா தொற்றுக்கு பிறகு மலேசிய நாட்டின் சுற்றுலாத்துறை மந்தமாகவே உள்ளது. இதனை சரி செய்வதற்கு மிக குறுகிய காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


Related Tags :
Next Story