கார் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் ஓய்வு பெற்ற சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பலி
கார் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் ஓய்வு பெற்ற சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பலியானார்.
கார் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் ஓய்வு பெற்ற சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பலியானார்.
கீழ்பென்னாத்தூர் அருகே உள்ள கொளத்தூர் ஏர்ப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் அசோகன் (வயது 62). ஓய்வு பெற்ற சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர். நேற்று மோட்டார் சைக்கிளில் அசோகன் திருவண்ணாமலைக்கு சென்று விட்டு திரும்பிக்கொண்டிருந்தார்.
ஐந்து வீடு பகுதியில் முன்னால் சென்ற காரை அவர் முந்த முயன்றார். அப்போது எதிர்பாராத விதமாக கார் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் பலத்த காயமடைந்த அசோகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவல் அறிந்த கீழ்பென்னாத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அசோகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்த புகாரின் பேரில், வழக்கு பதிந்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.