ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் சாவு
ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் சாவு
முத்துப்பேட்டையை அடுத்த ஜாம்புவானோடை கல்லடிக்கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் பால்சாமி (வயது67). இவர் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு சேதுபாவாசத்திரம் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். ஓய்வு பெற்ற சப்- இன்ஸ்பெக்டர் பால்சாமி நேற்றுமுன்தினம் தனது வீட்டின் மாடிக்கு செல்லும் போது நிலைதடுமாறி மாடிபடியிலிருந்து தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். அவரை குடும்பத்தினர் மீட்டு தஞ்சையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். நேற்று சிகிச்சை பலனின்றி பால்சாமி உயிரிழந்தார். இதுகுறித்து பால்சாமி மகன் செந்தில்குமார் கொடுத்த புகாரின் பேரில் முத்துப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சப்-இன்ஸ்பெக்டர் பால்சாமியின் உடல் பிரேதப்பரிசோதனை செய்யப்பட்டு நேற்று மாலை முத்துப்பேட்டையை அடுத்த ஜாம்புவானோடை கல்லடிக்கொல்லையில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு வரப்பட்டு உறவினர்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருந்தது. அப்போது முத்துப்பேட்டை துணைபோலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தன், இன்ஸ்பெக்டர் ராஜேஷ் ஆகியோர் பால்சாமியின் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.