ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் கொலை
சோழவந்தானில் ஓய்வுபெற் சப்-இன்ஸ்பெக்டர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்.
சோழவந்தான்
சோழவந்தானில் ஓய்வுபெற் சப்-இன்ஸ்பெக்டர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்.
ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர்
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தேனூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜோதிமுத்து(வயது 65). இவரது மனைவி தனலட்சுமி.
ஜோதிமுத்து சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தேனூர் கிராமத்தில் தண்டல்காரராகவும் இருந்து வந்தார். தற்போது சோழவந்தான் ஜெனகை நாராயணபெருமாள் கோவில் இரவு காவலராக பணிபுரிந்து வந்தார்.
நேற்று முன்தினம் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அப்போது காவலாளியாக இருந்த ஜோதிமுத்து, கொடியேற்ற நிகழ்ச்சி முடிந்ததும் வைகை ஆற்றுப்பகுதிக்கு சென்றுள்ளார்.
குத்திக்கொலை
அங்கு மதுபோதையில் இருந்த சிலர், ஜோதிமுத்துவிடம் இருந்து பணத்தை பறிக்க முயன்றனர். பின்னர் ஆத்திரம் அடைந்த அந்த கும்பலை சேர்ந்தவர்கள், அவரை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.
பலத்த காயம் அடைந்த அவர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று ஜோதிமுத்து பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து சோழவந்தான் இன்ஸ்பெக்டர் சிவபாலன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பி ஓடிய மர்ம கும்பலை தனிப்படையினர் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.