ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்


ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
x

நெல்லையில் ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருநெல்வேலி

நெல்லை வண்ணார்பேட்டையில் ஓய்வுபெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர் நலச்சங்கம் சார்பில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. தன் பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் பணமில்லா சிகிச்சையை நடைமுறைப்படுத்த வேண்டும். 70 வயது நிறைவடைந்த ஓய்வூதியர் அல்லது குடும்ப ஓய்வூதியர்களுக்கு 10 சதவீத கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். அகவிலைப்படியை மத்திய அரசு வழங்கும் அதே நாளில் அதே விகிதத்தில் வழங்க வேண்டும். குடும்ப நலநிதியை ரூ.1 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்ட தலைவர் நெல்லையப்பன் தலைமை தாங்கினார். செயற்குழு உறுப்பினர் நல்லையா, பொதுக்குழு உறுப்பினர் முத்துபிள்ளை, நெல்லை வட்ட தலைவர் ஆதிமூலம், மாவட்ட செயலாளர் அமராவதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணைத்தலைவர் சந்திரா, பாளையங்கோட்டை வட்ட செயலாளர் பாலகிருஷ்ணன், வட்ட தலைவர் நிம்ரோத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story