ஓய்வுபெற்ற போக்குவரத்து கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
நெல்லையில் ஓய்வுபெற்ற போக்குவரத்து கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருநெல்வேலி
நெல்லை வண்ணார்பேட்டை அரசு போக்குவரத்து கழக மேலாளர் அலுவலகம் முன்பு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நலஅமைப்பு சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் தாணு மூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர் முத்துகிருஷ்ணன், நிர்வாகிகள் சிவதாணுதாஸ், இ.எம்.பழனி ஆகியோர் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்கள்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் காலியாக உள்ள 25 ஆயிரம் காலிப்பணியிடங்களை அரசும், நிர்வாகமும் வாரிசுதாரர்களை, இளைஞர்களை வைத்து நிரந்தரமாக நிரப்ப வலியுறுத்தியும், அதை விடுத்து ஓய்வு பெற்ற தொழிலாளியை மீண்டும் பணிக்கு எடுப்பதை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் பெருமாள், மாரிமுத்து, சுப்பையா, ராமையா பாண்டியன் மாணிக்கம் தர்மராஜ், தங்கமாரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story