ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம்


ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம்
x

ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்

மதுரை


அரசு போக்குவரத்து கழக சி.ஐ.டி.யு. ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் நல சங்கம் சார்பில், ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு 93 மாத அகவிலைப்படி நிலுவைகளை உடனே வழங்க வேண்டும். 1.12.2022 முதல் ஓய்வு பெற்றவர்களுக்கு பணப்பலன்களை உடனே வழங்க வேண்டும். 5 சதவீத கட்டுப்பாட்டை நீக்கி வாரிசு வேலையை உடனே வழங்க வேண்டும். இ.ஆர்.பி.எஸ். நிலுவை தொகையை உடனே வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு மருத்துவ காப்பீட்டை அமல்படுத்த வேண்டும். பணியில் உள்ள அனைத்து தொழிலாளர்களுக்கும் பழைய ஓய்வூதிய திட்ட ஒப்பந்தத்தில் உள்ளபடி அமல்படுத்த வேண்டும். ஊதிய பேச்சுவார்த்தை காலதாமதமின்றி உடனே வழங்க வேண்டும் என்ற 7 கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம் மதுரை அரசு போக்குவரத்து தலைமையகம் முன்பு நேற்று நடந்தது. சங்க தலைவர் அழகர் தலைமை தாங்கினார். பொருளாளர் ரவி வரவேற்று பேசினார். துணை பொதுச்செயலாளர் நாகரத்தினம் முன்னிலை வகித்தார். பொதுச்செயலாளர் வாசுதேவன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். அரசு விரைவு போக்குவரத்து ஓய்வு பெற்றோர் நல அமைப்பு செயலாளர் நாகராஜன், சி.ஐ.டி.யு. அரசு போக்குவரத்து மதுரை தொழிலாளர் சங்க தலைவர் அழகர்சாமி, சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் லெனின் உள்ளிட்ட பலர் சிறப்புரையாற்றினர். முடிவில், அரசு போக்குவரத்து கழகம் தொழிலாளர்கள் நலச்சங்க துணைப் பொதுச் செயலாளர் சுப்பிரமணியன் நன்றி கூறினார். இதில், ஏராளமான தொழிலாளர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.


Next Story