ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
x

அகவிலைப்படி வழங்ககோரி ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மதுரை

மதுரை பைபாஸ் சாலையில் உள்ள போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற நல அமைப்பு மதுரை மண்டலத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநிலத்தலைவர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

கோரிக்கைகளை விளக்கி மாநில துணைப் பொதுச்செயலாளர் தேவராஜ் பேசினார். சி.ஐ.டி.யு. அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்க மாநில சம்மேளன துணைத்தலைவர் பிச்சை வாழ்த்தி பேசினார். ஆர்ப்பாட்டத்தில் மதுரை மாவட்ட நிர்வாகிகள் முருகேசன், சவுரி தாஸ், ஆறுமுகம், செல்வராஜ் உள்ளிட்ட திண்டுக்கல், விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு, உயர்நீதிமன்ற உத்தரவுப்படி அகவிலைப்படி உயர்வினை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர்.

1 More update

Related Tags :
Next Story