போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு


போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு
x

போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

பெரம்பலூர்

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் நலச்சங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் சம்பத் தலைமையில், அச்சங்கத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தனர். அதில், தேர்தல் வாக்குறுதியில் கூறியது போல் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு போக்குவரத்து கழக ஓய்வூதியர்களின் 77 மாத காலமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஓய்வூதிய பஞ்சப்படி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகள் விரைந்து நிறைவேற்றி தர வேண்டும். மருத்துவ காப்பீட்டு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். மருத்துவப்படியை ரூ.300 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். கடந்த 2020-ம் ஆண்டு மே மாதம் முதல் நடப்பாண்டு மே மாதம் வரையில் விருப்ப ஓய்வு பெற்ற மற்றும் இறந்த தொழிலாளர்களின் வாரிசுகள், அத்துடன் தற்போது ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு கொடுக்க வேண்டிய ஓய்வு கால பலன்களை நிலுவையின்றி உடனே வழங்க வேண்டும். 2020-ம் ஆண்டிற்கு பின்னர் ஓய்வு பெற்றவர்களுக்கு ஒப்பந்த பலனும், 7-வது ஊதியக்குழு பரிந்துரை பலனும் வழங்க வேண்டும். போக்குவரத்து கழகங்கள் கடும் நிதி நெருக்கடியில் உள்ளதை கருத்தில் கொண்டு தேவையான நிதியை முழுமையாக வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டு இருந்தது.


Related Tags :
Next Story