ஓய்வூதியர்கள் தங்கள் விருப்பப்படி நேர்காணலுக்கு ஆஜராகலாம்


ஓய்வூதியர்கள் தங்கள் விருப்பப்படி நேர்காணலுக்கு ஆஜராகலாம்
x

ஓய்வூதியர்கள் தங்களது விருப்ப படி, ஓய்வூதிய நேர்காணலுக்கு ஆஜராகலாம் என்றும், அலுவலக நாட்களில் கருவூலத்துக்கு வர வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி

ஓய்வூதியர்கள் தங்களது விருப்ப படி, ஓய்வூதிய நேர்காணலுக்கு ஆஜராகலாம் என்றும், அலுவலக நாட்களில் கருவூலத்துக்கு வர வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நேர்காணல்

ஓய்வூதியம் பெரும் தமிழக அரசு ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் ஆண்டுதோறும் ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரை கருவூலத்தில் ஆண்டு நேர்காணல் செய்ய வேண்டும். கடந்த ஆண்டு நேர்காணல் நடைபெறாத நிலையில், தற்போது அரசாணைப்படி ஓய்வூதியர்கள் தங்களது விருப்பத்திற்கேற்ப ஏதேனும் ஒருமுறையை பின்பற்றி இந்த ஆண்டிற்கான நேர்காணல் செய்யலாம்.

அதன்படி, தமிழ்நாடு அரசு ஓய்வூதியர்களின் நலனை கருத்தில் கொண்டு, அவர்கள் நேரில் கருவூலத்திற்கு வருவதில் ஏற்படும் இடர்பாடுகளை தவிர்க்கும் பொருட்டு ஓய்வூதியர்கள் இருப்பிடத்தில் இருந்தபடியே தபால் துறை பணியாளர்கள் மூலம் ரூ.70 கட்டணம் செலுத்தி, மின்னணு வாழ்நாள் சான்று பதிவு செய்யலாம்.

மின்னணு வாழ்நாள்சான்றிதழ்

அரசு இ-சேவை மற்றும் பொதுசேவை மையங்களின் மூலம் ஓய்வூதியர், குடும்பஓய்வூதியர்கள் உரிய கட்டணம் செலுத்தி மின்னணு வாழ்நாள் சான்றிதழ் பதிவு செய்து ஆண்டு நேர்காணல் செய்யலாம். மின்னணு வாழ்நாள் சான்று பெற ஓய்வூதியர்கள், ஆதார் எண், ஓய்வூதிய எண் (பிபிஓ எண்), வங்கி கணக்கு எண், ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம் ஆகிய விவரங்களை அளிக்கவேண்டும்.

வாழ்நாள் சான்றினை www.tn.gov.in/karuvoolam என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து அலுவலர்களிடம் சான்றொப்பம் பெற்று தபால் மூலம் அனுப்ப வேண்டும். மேலும், ஓய்வூதியதாரர்கள் நேரடி நேர்காணலுக்கு ஓய்வூதிய புத்தகத்துடன் அரசு வேலை நாட்களில் ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம் மற்றும் கருவூலத்திற்கு வரவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story