மின்வாரிய ஊழியர் பணியிடை நீக்கம்


மின்வாரிய ஊழியர் பணியிடை நீக்கம்
x
தினத்தந்தி 25 Sept 2022 12:15 AM IST (Updated: 25 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

சாத்தான்குளம் அருகே போதையில் தூங்கிய மின்வாரிய ஊழியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

தூத்துக்குடி

தட்டார்மடம்:

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே பேய்க்குளத்தை அடுத்த பழனியப்பபுரம் துணை மின் நிலையத்தில் கடந்த 22-ந்தேதி இரவில் பணியாற்றிய மின்வாரிய ஊழியர் மின் இணைப்பை துண்டித்து விட்டு போதையில் தூங்கியதால், சுற்று வட்டார கிராமங்கள் இருளில் மூழ்கின. உடனே சக ஊழியர்கள் சென்று மின் இணைப்பு வழங்கினர்.

இதையடுத்து சம்பவத்தன்று இரவில் அங்கு பணியாற்றிய மின் கம்பியாளர் பாலசுந்தரம் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொண்டு, அவரை பணியிடை நீக்கம் செய்து சாத்தான்குளம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் உத்தரவிட்டார்.

1 More update

Next Story