பழுதான 63 வாக்குப்பதிவு எந்திரங்கள் திரும்ப அனுப்பி வைப்பு


பழுதான 63 வாக்குப்பதிவு எந்திரங்கள் திரும்ப அனுப்பி வைப்பு
x
தினத்தந்தி 19 Aug 2023 9:15 PM GMT (Updated: 19 Aug 2023 9:15 PM GMT)

பழுதான 63 வாக்குப்பதிவு எந்திரங்கள் திரும்ப அனுப்பி வைப்பு

நீலகிரி

ஊட்டி

அடுத்த ஆண்டு(2024) மே மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் தீவிரமாக செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக கடந்த ஜூன் மாத இறுதியில் மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கான பயிற்சி சென்னையில் நடந்தது.

இதையடுத்து ஜூலை மாதம் 4-ந் தேதி அனைத்து மாவட்டங்களிலும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சோதனை செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி பிங்கர்போஸ்ட் கூடுதல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திர கிடங்கில் இருந்த 1,501 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், 1,124 கட்டுபாட்டு கருவி மற்றும் 1,061 விவி பேட் எந்திரங்களில் முதல் நிலை சரிபார்ப்பு பணிகள் நடந்தது. பெங்களூரு பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தை சேர்ந்த 6 பொறியாளர்கள் அடங்கிய குழுவினர் இந்த பணிகளை மேற்கொண்டனர். ஆய்வின்போது 63 வாக்குப்பதிவு எந்திரங்கள் பழுதாகி இருந்தது கண்டறியப்பட்டது. இதைதொடர்ந்து அந்த எந்திரங்கள் பழுது நீக்கும் பணிக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதையொட்டி வாக்குப்பதிவு எந்திரங்கள் உள்ள அறை மாவட்ட கலெக்டர் அம்ரித் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் திறக்கப்பட்டது. தொடர்ந்து பழுதான எந்திரங்கள் பழுது நீக்கும் பணிக்காக சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.


Next Story