நரிக்குறவ மாணவர்களை அரசு பள்ளியில் சேர்த்த வருவாய் கோட்டாட்சியர்


நரிக்குறவ மாணவர்களை அரசு பள்ளியில் சேர்த்த வருவாய் கோட்டாட்சியர்
x

நரிக்குறவ மாணவர்களை அரசு பள்ளியில் சேர்த்த வருவாய் கோட்டாட்சியர்

நாகப்பட்டினம்

வாய்மேடு:

நாகை மாவட்டம் வாய்மேடு மற்றும் பஞ்சநதிக்குளம் மேற்கு பகுதியில் 20 நரிக்குறவர் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களின் குழந்தைகளை பள்ளியில் படிக்க வைப்பதற்கு பிறப்பு சான்றிதழ், ஆதார் அட்டை, குடும்ப அட்டை இல்லாமல் பள்ளியில் சேர்க்காமல் இருந்தனர். இவர்களை பள்ளியில் சேர்க்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்று நேற்று நரிக்குறவ இன மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு கோட்டாட்சியர் ஜெயராஜ் பவுலின் ேநரில் சென்று நரிக்குறவ இன 6 குழந்தைகளை தனது காரில் ஏற்றி சென்று வாய்மேடு இலக்குவனார் அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளியில் சேர்த்தார். இதில் தாசில்தார் ரவிச்சந்திரன், தலைமையிடத்து துணை தாசில்தார் வேதையன், ஊராட்சி மன்ற தலைவர் மலர் மீனாட்சி சுந்தரம், பள்ளி தலைமை ஆசிரியர் சார்லஸ் ஆகியோர் கலந்துகொண்டனர். நரிக்குற மக்கள் வசிக்கும் இடத்திற்கு நேரில் சென்று குழந்தைகளை தனது காரில் ஏற்றி கொண்டு பள்ளியில் சேர்த்த வருவாய் கோட்டாட்சியரை அந்த பகுதி மக்கள் பெரிதும் பாராட்டினர்.

1 More update

Next Story